Categories
தேசிய செய்திகள்

ஜூலை 16ஆம் தேதி நடைதிறப்பு…. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

மேலும் 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். 21 ஆம் தேதி வரை நடை திறந்து இருக்கும் என்றும் அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

Categories

Tech |