Categories
தேசிய செய்திகள்

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி…. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியானா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூலை 16ஆம் தேதி, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஜூலை 23ஆம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள எந்த மாணவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |