கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. ஜூலை 19ஆம் தேதி முக்கிய பாடங்களுக்கும், ஜூலை 22ஆம் தேதி மொழி பாடங்களுக்கும், காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார். ஒரு அறைக்கு 12 மாணவர்கள் வீதம், 73,066 அறைகளில் 8.76 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.