இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஜூலை 19 முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக தளர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டின் கேபினட் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்கள் விடுபடும் காலம் வந்துவிட்டது என்பதால், இனி மாஸ்க் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.