நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 3 முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது.
ஆனால் மூன்றுமே மிக குறைந்த நாட்களே நடத்தப்பட்டது. இந்த முறை நடக்கு இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் இருக்கிறது. மேலும் இதில் பங்கேற்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத எம்பிக்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.