தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் மாணவ மாணவிகளை கல்லூரிகளுக்கு அழைத்து விண்ணப்பம் வழங்க கூடாது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.