திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத அங்கப் பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன் ஜூலை இருபதாம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 20 காலை 11 மணி முதல் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டோக்கன்களை முன் பதிவு செய்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை தவிர்த்து தினந்தோறும் 750 டோக்கன்கள் ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.