இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் செல்போன் என்பது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இளைஞர்கள் அவ்வப்போது வெளியாகும் புதிய மாடல் செல்போன்களை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதன்முதலாக 5ஜி நெட்வொர்க் உடைய செல்போன் வெளியாகிறது.
ரெட்மி ஸ்மார்ட் போன்களின் முதல் 5ஜி போனான ரெட்மி “நோட் 10டி” வருகிற ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திறன் குறித்த செய்திகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் கேமரா உட்பட மூன்று கேமராக்கள் என போகோ m3 ப்ரோ ஸ்மார்ட் போனுக்கு நிகர திறன் இதில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.