தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாகவும், வளிமண்டல சுழற்சி காரணமாகவும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஜூலை 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 21ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, வங்கக்கடல், அரபிக்கடலின் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.