நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு தற்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் அசாம் மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை தொடரும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் நிலவும் மோசமான வெள்ள சூழலுக்கு மத்தியில் கோடை விடுமுறையை சில நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படுவதால் அமைச்சர் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் வழக்கமாக ஜூலை முதல் வாரத்தில் கோடை விடுமுறை தொடங்கும்.ஆனால் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் இந்த முறை முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் ஜூன் 25-ம் தேதியுடன் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவடைய உள்ளதால் ஜூலை 25 ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.