நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனா குறைந்த நிலையில், தங்கும் விடுதிகள் மற்றும் மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.