தமிழகத்தில் கொரோனாவின் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையை மையமாக கொண்டு வேகமெடுத்து கொரோனா தற்போது சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவது மக்களின் வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3985 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 83 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1245 ஆக அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.