நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமான சேவைக்கான தலையை வருகின்ற ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து விமான சேவை தற்போதுள்ள நடைமுறையில் தொடரும் என தெரிவித்துள்ளது.