Categories
மாநில செய்திகள்

ஜூலை 5 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 5ஆம் தேதி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளை மூடவும் விலைவாசி உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

Categories

Tech |