காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர் வகுப்பில் அமர்ந்துகொண்டு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அருந்தினார்கள். இதை பார்த்த மற்ற மாணவிகள் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் போட்டுவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மதுபானம் அருந்திய மாணவி விவகாரம் குறித்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து மாணவியை கண்டித்தனர். இதையடுத்து அந்த 5 மாணவிகளை இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதைப் போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரி படிக்கின்ற மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.