Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து…. “சிறுமிக்கு நடந்த கொடூரம்”… விடுதி உரிமையாளர் அதிரடி கைது…!!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விடுதி உரிமையாளரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் வசித்த சாந்தா என்பவர் 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றார். பின் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பெற்றோரிடம் சாந்தா ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம்அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இவ்விசாரணையில் சிறுமியை அழைத்துச் சென்ற சாந்தாவிடம் விசாரித்தபோது அவர் கீழப்பழூவூரை சேர்ந்த சந்திராவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் சிறுமியை கீழப்பழுவூர் வி.கைகாட்டி, செந்துறை, தஞ்சாவூர் பகுதிகளுக்கு கூட்டிச்சென்று ஜூஸ்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும், சாந்தா உடந்தையாக இருந்ததாகவும், தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சாந்தா, சந்திரா, தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த வினோத்(29), வி.கைகாட்டி சேர்ந்த பிரேம்(29), நாகமங்கலம் பகுதியை சேர்ந்த பாலசந்தர்(27), செந்துறை பகுதியில் வசித்து வரும்  தங்கும் விடுதி மேலாளர் தனவேல்(58), கீழப்பழுவூர் பகுதியை சேர்ந்த வெற்றி கண்ணன்(37), ராஜேந்திரன் (62), திருமானூர் பகுதியை சேர்ந்த தெய்வீகன்(49) ஆகிய ஒன்பது பேரையும் கடந்த 6ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இதை அடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், துணை  சூப்பிரண்டு சங்கர் கணேஷ் முன்னிலையில் போலீசார்கள் இது குறித்து வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று கூடுதல் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த சிறுமியை  சில நாட்கள் அமிர்தராயன்கோட்டை  பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் தனது  வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார்  கடந்த 8ஆம் தேதி இந்திரா கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்  அரியலூர் -செந்துறை ரோட்டில் உள்ள தனியார் விடுதி உரிமையாளர் செந்துறை சித்துடையார் கிராமம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற கந்தசாமி (45)என்பவரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |