Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் தொடங்கிய மீன்பிடி தடை காலம்”… அசைவப்பிரியர்கள் கவலை..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகத்தில் மீன்பிடி தடைகாலம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் வருடந்தோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களும் மீன்களின் இனப்பெருக்க மாதங்களாக கருதி இந்த மூன்று மாதங்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் 15 ஆம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் விசைப்படகு எடுத்துக்கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டிருக்கின்றது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகத்தில் இருக்கும் 750 மேலான விசைப்படகுகள் கடலிலிருந்து கரைக்கு எடுத்து வரப்பட்டு படகில் உள்ள பழுதுபார்க்கும் பணிகளை மீனவர்கள் செய்வார்கள். ஆனால் இந்தத் தடையானது நாட்டுப்படகு மீனவர்களுக்கு பொருந்தாது.

அவர்கள் எப்பொழுதும் போல் மீன்பிடிக்க செல்லலாம். ஆனால் இழுவலை, தள்ளு வலை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மீன்களை பிடிக்க கூடாது. படுவலை மற்றும் தூண்டில் மூலமாகத்தான் மீன்களை அவர்கள் பிடிக்க வேண்டும். நேற்று இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட துறைமுகத்தில் மீன் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. 61 நாட்கள் மீன்கள் கிடைக்காது என்பதால் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைவரும் வந்து மீன்களை வாங்கினார்கள்.

தடை காலம் முடியும் வரை மீன்களின் விலை அதிகரிக்க தொடங்கும். இதனால் கடற்கரை பகுதிக்கு அருகே வசிப்பவர்கள் காலம் காலமாக மீன்களை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இவர்கள் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததால் மீன்களின் விலை உயர்ந்து விடும். இதனால் மீன்களை எளிதாக சாப்பிட முடியாது என கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |