திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995-ல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி நாற்பத்தி ஒருவருக்கு பிரித்துக் கொடுத்ததாகக் புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர் இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.