Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா….. எச்சரிக்கும் WHO….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் அமெரிக்கா பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் உச்சத்தை தொட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே வாரத்தில் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், டெல்டா மற்றும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மேலும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மின்னல் வேகத்தில் பரவக்கூடிய கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலையில், இப்போது ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பாதிப்பில் சுனாமியை ஏற்படுத்தியது. இது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பை செயலிழக்க செய்ய கூடும். ஏற்கனவே அதிகப்படியான சுகாதார ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு எதிராக உலக நாடுகள் பெரும் போராட்டம் நடத்தின.

அடுத்த ஆண்டு கொரோனா கட்டுக்குள் வரும் என்று நினைக்கிறேன். ஆனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்வதில்தான் வைரஸ் எவ்வளவு சீக்கிரம் ஒலிக்கப்படும் என்பது அடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் 40% பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு இது 70% உயர வேண்டும். அடுத்த ஆண்டிலாவது தடுப்பூசி சமத்துவம் இருக்க வேண்டும் என்பதை உலக நாட்டு தலைவர்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். மேலும் அடுத்தாண்டு அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என்பதை நாம் புத்தாண்டு உறுதி மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |