Categories
மாநில செய்திகள்

ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான்…. 7வது இடத்தில் தமிழகம்…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்துள்ளது. இதில் டெல்லியில் முதலிடம் மற்றும் தமிழ்நாட்டில் ஏழாவது இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |