Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவை விட பல மடங்கு வேகத்தில் பரவி பரவுவதாக விஞ்ஞானிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். பரிசோதனைகள் செய்து கண்டறியப்படுவதை விட அதிகப்படியான ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுபற்றி ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசனில் பேசிய, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜூன் மற்றும் டிராபிகல் மெடிசின் தொற்று நோய் நோபியல் துறை வல்லுநர் ஜான் எட்மண்ட்ஸ் பரிசோதனைகள் செய்து கண்டறியப்படுவதை விட அதிகப்படியான மைக்ரான் தொற்று பரவியுள்ளது.

இதையடுத்து முதல்கட்ட ஆய்வக தகவலின்படி, தடுப்பூசிகள் முழுவதுமாக செயல்படாமல் போகவில்லை என்றும், சிறிதளவு பயன் இருக்கு என்றும்,
தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று உள்ள நபர்களிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் கூட, முன்கூட்டியே பாதிப்புகளை கொண்டு அறிய வேண்டியது அவசியமான ஒன்றாகும். தற்போதைய வேகத்தில் ஒமைக்ரான் பரவினால் வரும் கிறிஸ்மஸ் நாளில் தினமும் 60,000 என்ற எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் ஒன்றுபட்டால் தான் இந்த தொற்றை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் பேசுகையில், நடப்பு மாதத்தின் இறுதியில் மொத்த மதிப்பு 10 லட்சத்தை தாண்டும் அபாயகரமான சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே இங்கிலாந்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் இங்கிலாந்தில் 1,300 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி ஆய்வு நடத்தியதில் 2 டோஸ் தடுப்பூசி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் 3-ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 75% பேருக்கு எந்த ஒரு அறிகுறிகளும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |