தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்று மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதியவகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான் மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது.
அதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். இதையடுத்து, தற்போது இந்தியாவிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றனர். தற்போது ஒமைக்ரான் வைரஸ் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்தநிலையில் தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது.
எனினும் தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகவில்லை. ஆனால் எல்லை மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடர்ந்து நடைமுறையில் இருப்பது மிகவும் ஆபத்தானது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமானது. தற்போது தொடர்புகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அண்டை மாநிலத்தின் எல்லைகளை மூட வேண்டும். பின்னர் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றினால் தான் கொரோனா தொற்றிலிருந்து இருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியும்.