Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாளும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணையர் இக்பால் சிங் சாஹல் பிறப்பித்த உத்தரவின்படி, மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப்புறங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள், விழா, கூட்டம் ஆகிய செயல்பாடுகள் திறந்த வெளியிலோ, அல்லது மூடப்பட்ட உள் அரங்கத்திலோ நடைபெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு டிசம்பர் 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |