நடிகை ஜெனிலியா டுவிட்டரில் ஜாலியாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , உத்தமபுத்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன்பின் ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் . சமீபத்தில் நடிகை ஜெனிலியா ஸ்கேட்டிங் செய்யும் போது கீழே விழுந்து கையில் அடிபட்டதை ஜாலியான வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் .
https://twitter.com/geneliad/status/1372819337485029382
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஜெனிலியா விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது . அதில் ரித்தேஷ் தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் கைகளில் முத்தமிடுகிறார் . இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியாவின் முகம் மாறுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீட்டிற்கு வந்த பின் என்ன நடந்தது? என்பதை நடிகை ஜெனிலியா ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். தனது கணவரை ஜெனிலியா அடித்து உதைப்பது போன்ற இந்த காமெடியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.