ஜென்டில்மேன்2 திரைப் படத்தில் ஹீரோவாக அர்ஜுன் நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளது.
ஜென்டில்மேன் திரைப்படமானது 1993-ம் வருடம் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுனும் கதாநாயகியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் மனோரமா, செந்தில், கவுண்டமணி என பலரும் நடித்து மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சு மோகன் கூறியுள்ளார்.
இதன்படி ஜென்டில்மேன்2 படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிப்பதாக வெளியாகியிருந்த நிலையில் ஹீரோ யார் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஹீரோவாக அர்ஜுன் தான் நடிக்க இருப்பதாக தகவல் வந்திருக்கின்றது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வராத நிலையில், ரசிகர்கள் தற்போது இருக்கும் இளம் நடிகர்களில் யாரையாவது நடிக்க வைக்கலாமே என்று கருத்து கூறி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.