ஜென்டில்மேன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜென்டில்மேன் திரைப்படமானது 1993-ம் வருடம் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுனும் கதாநாயகியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் மனோரமா, செந்தில், கவுண்டமணி என பலரும் நடித்து மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சு மோகன் கூறியுள்ளார்.
இதன்படி ஜென்டில்மேன்2 படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிப்பதாக வெளியாகியிருந்த நிலையில் ஹீரோ யார் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்தநிலையில் இத்திரைப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கின்றார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்க இருக்கின்றார். இதனை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கின்றது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் குறிப்பிடத்தக்கது.