Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

ஜெபத்தின் போது… இதை உச்சரியுங்கள்… மாற்றம் உண்டாகும்…!!!

உங்களில்  இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக்  காரியத்தைக்  குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டுருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினுல் அது அவர்களுக்குச்  உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:19)

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக்  கேட்டுக்கொள்வீர்களோ,  அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். (மாற்கு  11:24)

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்கள  உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். (மாற்கு 11: 24)

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினுலே ஒன்றும்   கேட்கவில்லே;  கேளுங்கள்,அப்பொழுது உங்கள்  சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். (யோவான்  116:24)

எந்தச்  சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும்  விண்ணப்பத்தோடும்  ஆவியினுலே ஜெபம்பண்ணி ,அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் ஆகவும் பண்ணும்  வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். (ஏபேசியார் 6:18)

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினுலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (பிலிப்பியர் 4: 6)

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5: 17)

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு  விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் . (மார்க் 14:38)

ஒருவருக்காக  ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். (யாக்கோபு 5: 16)

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிடுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளீப்பார்.

பிரியமானவர்களே இந்த வசனங்களை உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும்.

Categories

Tech |