திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர், இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர் .ஆனால் கடந்த ஏழு ஆண்டுகள் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டன அதன் விளைவு விரைவில் அந்த ஆட்சிக்கு முடிவு வரும்.
இதே ஜெப கூட்டத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மூவரும் உள்ளோம். இதுதான் மத நல்லிணக்கம் மத ஒற்றுமை. இந்தியா பல்வேறு மொழிகள் மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது . கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்தது என்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்களின் திருச்சபையில் புனித இடமாக கருதப்படும் பலிபீடத்தில் திமுகவினர் அமைச்சருடன் ஏறி நின்று கொண்டு பேசியது கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது.