Categories
அரசியல்

ஜெயக்குமாரை சிறைக்கு சென்று சந்தித்த ஓபிஎஸ்…!! காரணம் என்ன…??

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் சிலரால் தாக்கப்பட்டு அரை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவை சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 7ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை திருவள்ளூர் பகுதியில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். அவருடன் கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Categories

Tech |