தி.மு.கவினர் மற்றும் காவல் துறையினரின் ஜனநாயக படுகொலை ஈடுபடுவதற்கு ஜெயக்குமார் கைது ஒரு முன்மாதிரி என அ.தி.மு.க தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்த தி.மு.க.வினரை ஜெயகுமார் தடுத்து நிறுத்தி இருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கத்தில் விஜயகுமார் செய்த இந்தச் செயல் இந்த வகையில் முறைகேடானது? சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர் தப்பிக்க கூடாது என்பதற்காக கைகளை கட்டி போலீசாரிடம் ஒப்படைப்பது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது. அதுபோல ஜெயக்குமார் கள்ள ஓட்டு போட வந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
மேலும் அவர் செய்தது நியாயம் என தமிழக மக்கள் அறிவார்கள் எனவும் உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அ.தி.மு.க.வினரின் அராஜகம் இருக்கும் என மனநிலையால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி மறு தேர்த்தலுக்கு உத்தரவிட்டதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் தனது ஜனநாயக விரோத செயல்களை தி.மு.க கையை விடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தி.மு.க இந்த அராஜகத்தையும் , அ.தி.மு.கவின் மீதுமுறைகேடாக நடத்தப்படும் தாக்குதலையும் சட்டதின் துணைகொண்டு கழகம் முறியடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.