நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்தவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என்று முதல்வர் கூறுகிறாரா..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.