Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம்”… பரபரப்பாக பேசும் கோடம்பாக்கத்தினர்…!!!

ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் திரைப்படத்திற்கு நயன்தாரா கேட்ட சம்பளம் கோடம்பாக்கத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் ஜனகனமன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சூட்டிங் பாதிக்கப்பட்டு நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைவதற்குள் இவர்கள் இருவரும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். அத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

அந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த நிலையில் ஜெயம் ரவி குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் நயன்தாரா 5 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது 10 கோடி கேட்டுள்ளதால் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 5 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் திடீரென உயர்த்தியதால் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் பரபரப்பாக பேசி வருகின்றார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

Categories

Tech |