நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது .
மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து நடிகை சாய் பல்லவி தமிழில் தனுஷின் மாரி-2, சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவி நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான தாம்தூம் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார். இந்த படத்தில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்திருந்தார் . இந்நிலையில் தாம் தூம் படத்தில் சாய்பல்லவி நடித்திருந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.