Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவியின் ‘பூமி’ ஓடிடியில் ரிலீஸ் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டிரைலரால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது .

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 2021 பொங்கல் தினத்தில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |