Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவியின் ‘பூமி’… படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு …!!!

நடிகர் ஜெயம்ரவி  ‘பூமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார் . 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’ . இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் ‌ . சமீபத்தில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் ‘தமிழனென்று சொல்லடா ‘ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது . இந்த படத்தின் பாடல்கள் நாளை ( டிசம்பர் 14 ) வெளியிடப்படும் என நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

Categories

Tech |