Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவியுடன் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா…. வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பல வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிறார். நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்குப்படம் உயர்ந்து கொண்டே வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிக பட்சமாக 3 கோடி என இருந்தது. அதன் பிறகு 5 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியானது.அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்துக்குதான் நயன்தாரா 10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு மட்டுமே இவ்வளவு சம்பளம் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |