தனி ஒருவன் படத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தனி ஒருவன் . இயக்குனர் மோகன் ராஜா இயக்கியிருந்த இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் .
இந்நிலையில் இந்த படத்தில் சீரியல் நடிகர் கோபி ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் கோபி தனி ஒருவன் படத்தில் நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.