ஜெயலலிதாவின் மரணம் அன்று நடந்த பல விஷயங்கள் பற்றிய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சசிகலா பேட்டியளித்துள்ளார். அதில், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மிகவும் கடினமாக இருந்தது. நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்கடித்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அப்பாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன். இப்போது அதனை நான் செய்து கொண்டிருக்கிறேன். பாஜக தலைவர்களின் பிடித்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டார். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என்று நினைத்தேன். மருத்துவர்கள் சரியான இடைவெளியில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
நான் பன் மற்றும் காபியை எடுத்து சென்ற போது மருத்துவமனை படுக்கையில் ஜெயலலிதா படுத்திருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் மடியிலிருந்த டிவி ரிமோட்டை எடுக்கச் சென்றபோது அவர் மயங்கி விட்டார். அப்போது படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவர் தினசரி மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தார் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மயங்கி அதை கண்டு, சசிகலா அக்கா அக்கா என்று அலறியதாகவும் அதன் பிறகு வந்தவர்கள் ஜெயலலிதாவை ஐசியுவிற்கு வேகமாக அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.