தமிழக மக்கள் சின்னம்மாவை ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்கிறார்கள் என்று கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சின்னம்மாவுக்கு கூடியது தன்னார்வ கூட்டம், அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் சின்னம்மாவை வரவேற்க திரண்டனர், இதன் மூலம் அம்மாவின் மறு உருவமாக சின்னம்மாவை மக்கள் பார்க்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்று நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலா வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கருணாசின் இந்த கருத்து முதல்வர் தரப்பை கடுப்பேற்றியுள்ளது.