அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி புத்தி தடுமாற்றத்தில் இருக்கிறார். இதனால் செம்மலை அவருக்கு புத்திசொல்ல வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் துரோகம் செய்துள்ளார் என விமர்சித்துள்ளார். இதற்கு முன்னதாக தனிநீதிபதியின் தீர்ப்பு 75 பக்கங்கள் கொண்டதாக இருந்தது எல்லாமே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுக் குழுவை கூட்ட எடுத்த முடிவு தவறு என்று தான் எங்கள் கருத்து. கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் இருக்கிறது.
இதிலுள்ள தவறுகளை சுட்டிக் காட்டி தான் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு மேல் முறையீடுக்கு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். கட்சி பிரச்சனைகளில் நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டதுதான் தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு சாதகமாக வரும் என்றும் பேசினர். பல காலமாக திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி பெறுவதற்கு முயற்சிசெய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். அவற்றிற்கு செம்மலை துணையாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒற்றைத்தலைமை வேண்டுமென தொண்டர்கள் விருப்பப்படுவதாக எனும்கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, எடப்பாடி தொண்டர்களை சந்திக்கவில்லை. எந்த ஒரு மாவட்டத்திலும் செயல்வீரர்கள் கூட்டம், அ.தி.மு.க கட்சிநிர்வாகிகள் கூட்டம் நடத்தி நான் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு கேட்கவில்லை. ஆகவே எடப்பாடிக்கு ஆதரவாக தொண்டர்கள் யாருமில்லை என்றும் விமர்சனம் செய்தார்.