சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப் படுத்தப்பட்டதாக கூறப்படுவது சுத்தப் பொய் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி தாராபுரத்தில் பரப்புரை செய்தார்.
இதில் 1989-ல் சட்டப்பேரவையில் திமுகவினரால் ஜெயலலிதா அவமானப்படுத்த பட்டதாக கூறினார். இது அபாண்டமான பொய் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். பட்ஜட் தாக்குதலை தடுக்க அதிமுகவினர் நடத்திய நாடகம் அது என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இதை திருநாவுக்கரசரே சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்தார்.