Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா இறக்கவே இல்லை…. அப்பல்லோ செய்த உட்டாலக்கடி…. வெளியான அறிக்கை….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்திய தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது அதன் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியே மரணம் அடைந்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி காலை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டு அறிக்கையில் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் கூடுதலாக,செய்தி சேனல்கள் ஜெயலலிதா இறந்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இது முற்றிலும் பொய் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது அப்போலோ வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |