Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை…. நானும் அடைந்துள்ளேன் – குஷ்பூ பிரச்சாரம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் குஷ்பூ, “நான் கட்சி மாறுகிறேன் என என்னை விமர்சிக்கிறார்கள். வேறு யாரும் கட்சி மாறுவது இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக எந்த திட்டத்தையும்  நிறைவேற்றவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை எனில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு மாறியது ஏன்? ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்துள்ளேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |