ஜெயலலிதா, சிவாஜி கணேசன் ஆசைப்பட்டும் ரஜினிக்கு நடக்காமல் போன அந்த விஷயம் குறித்து தான் தற்போது பேசப்படுகின்றது.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்டத்தில் இடம் பெற்ற வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன் நாவலை எடுத்தால் வந்திய தேவனாக யாரை நடிக்க வைக்கலாம் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டபோது ரஜினி எனக் கூறினார்.
இதே கேள்விப்பட்ட ரஜினி மிகவும் சந்தோஷப்பட்டார். இதன் பின் கமல் இது குறித்து சிவாஜி கணேசனிடம் கேட்டபோது, வந்திய தேவனாக ரஜினி நடிக்க வை என்றாராம். அப்போ நான் என கமல் கேட்டதற்கு நீ அருள்மொழி வருமனாக நடி எனக் கூறினாராம். ஆனால் ஜெயலலிதா, சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் ஆசைப்பட்டும் ரஜினியால் வந்திய தேவனாக நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் ரஜினி நான் பழுவேட்டரையராக நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.