தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்குகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்
விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மழைநீர் வீட்டிற்குள் புகுந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
அவர்கள் அருகிலுள்ள பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று நாட்களாகியும் மழைநீர் வடியாத காரணத்தினால் திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். திமுக அரசு மழைநீர் வெளியேற்றுவதற்கு எந்த போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் ஆனால் அதனை திமுக அரசு செய்யத் தவறி விட்டது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது சசிகலா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த காலங்களில் ஏற்பட்ட போது செய்ததை போல வெளி மாநிலங்களில் இருந்து ராட்சச மோட்டார்களை வரவழைத்து 24 மணி நேரங்களில் நிலைமையை சரி செய்தது போல் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா கோரிக்கை வைத்துள்ளார். உணவுப் பொருள்கள் மருந்து மாத்திரை குறிப்பாக பெண்களின் அடிப்படை தேவையான நாப்கின் உள்ளிட்டவைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.