ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் அரசுக்கு பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நினைவிட கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்கள். அந்த பணி தற்போது அந்தப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அதில் பினிக்ஸ் பறவை போன்ற கட்டுமானம் ராட்சத வடிவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அது தொடர்பான வரைபடங்களை பொதுப்பணித்துறை அரசுக்கு அனுப்பி அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளது. அரசு அனுமதி வழங்கிய உடன் பணிகள் விரைவில் தொடங்கும்.