தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தில் பரவும் கொரோனா ஜெயலலிதா நினைவிடத்தில் பரவாதா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் சில கட்டுப்பாடுகள் இன்னும் அமுலில் தான் உள்ளது. இதற்கு மத்தியில் ஒவ்வொரு வருடமும் முக்கிய அரசு விழாக்களின் போது கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் துவக்க விழா முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க நடந்தது. ஜெயலலிதா நினைவிடத்தில் மட்டும் கொரோனா பரவாதா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.