ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயப்பிரதீப் பரபரப்பு twitter பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமென்று அதிமுக உண்மை தொண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மகனின் இந்த ட்விட்டர் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.