Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை… ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!!

ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலை.யை அண்ணாமலை பல்கலை., உடன் இணைக்கிறார்கள் என்று ஈபிஎஸ் குற்றஞ்சாட்டினார்..

தமிழக சட்ட பேரவையில் இன்று  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை உடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த அறிவிப்புக்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்…

திமுக அமைச்சர் பொன்முடி, நாகையில் உள்ள மீன்வளப் பல்கலை., சென்னையில் உள்ள இசைப் பல்கலை ஆகியவை ஜெயலலிதா பெயரில்தான் தொடர்ந்து இயங்கிவருகிறது என்று விளக்கமளித்தார்..  அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை. காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து அதே பெயரில் தொடர்ந்திருக்குமா?, என்று கேள்வியெழுப்பினார்..

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அண்ணாமலை பல்கலை. உடன் ஜெயலலிதா பல்கலை இணைக்கப்படுகிறது.. கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.. தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா.. கல்வியில் புரட்சி செய்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அவரின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால் அந்த பல்கலை.யை அண்ணாமலை பல்கலை., உடன் இணைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்..

Categories

Tech |