Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. இது உண்மை கண்டறியும் குழு… நிபுணர் குழு அல்ல…. விரிவுபடுத்த தயார்…. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. அந்த ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்திடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழலில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

அந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் தற்போது  நடைபெற்று வருகிறது… ஏற்கனவே அப்போலோ நிர்வாகம், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. எங்களை தேவையில்லாமல் அவர்கள் வழக்கு விசாரணைக்கு இழுத்தடிக்கிறார்கள்.. ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லாத நிலையில், எங்களது மருத்துவர்களை தொடர்ந்து அவர்கள் அழைக்கிறார்கள். மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவர் என்னென்ன தகவல்களை சொல்ல முடியும் என்று பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.. இதற்கு தற்போது தமிழக அரசு பதில் அளித்து வருகிறது.

தமிழக அரசு தரப்பில், அப்போலோ நிர்வாகம் ஒரு நல்ல நிர்வாகம் தான்.. நல்ல மருத்துவமனை தான்.. ஆனால் ஒரு அரசால் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த ஒரு ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்கமுடியாது.. அவர்கள் சொல்வது போல நாங்கள் விசாரணை கமிஷனில் வேண்டுமென்றால் நிபுணர்களை சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்..

எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களை  கூட நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம்.. இந்தக் குழுவானது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியமான விஷயம்.. இந்த ஆணையம் என்பது உண்மை கண்டறியும் குழுவே தவிர, ஒரு நிபுணர் குழு அல்ல..  நிபுணர் குழு வாக இருக்கும் பட்சத்தில் தான் அதில், மருத்துவர்கள், நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லாம் இடம்பெற வேண்டும்.

இந்த ஆணையம் ஒரு ஆவணங்கள், ஆதாரங்களை குறிப்பிட்டவர்களிடம் இருந்து பெற்று திரட்டி அரசிடம் கொடுப்பது தான் வேலை.. அந்த ஆதாரத்தை வைத்து தான் அரசு சட்டமன்றத்தில் கூடி முடிவெடுக்கும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விஷயத்தில் பொது மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டியது எங்கள் கடமை..

நிர்வாகம் எந்த மாதிரியான சிகிச்சை வழங்கினார்கள்.. எப்படியான மருந்துகள் கொடுக்கப்பட்டது அடிப்படைத் தரவுகள் என்பது முழுமை அடைய வேண்டும். இதற்கு நிபுணர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. ஆனால் நீதிமன்றம் ஒருவேளை நினைக்கும் பட்சத்தில் இந்த ஆணையத்தை விரிவுபடுத்துவதற்கு மருத்துவர்கள், நிபுணர்கள் போன்றோர்கள் சேர்க்கப்பட்டு ஆணையத்தை விரிவுபடுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.. ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 50 அப்பல்லோ மருத்துவர்களை விசாரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.. தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |